• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.எஸ்.புரம் பகுதியில் அதிமுக பேனரை கிழித்த டிராபிக் ராமசாமி

February 16, 2019 தண்டோரா குழு

கோவையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த 3 பேனர்களை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கிழித்து எறிந்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அங்கு வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, 3 பேனர்களை கிழித்து ஏறிந்தார். நாளை கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒட்டி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி படம் போட்டிருந்த பேனரை கிழிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், பேனரை அகற்றி விடுவதாக உறுதியளித்தனர். ஆனால் உடனடியாக பேனரை அகற்ற கோரி பேனர் முன்பு தரையில் படுத்து போராட்டம் நடத்தினர். பேனரை அகற்றும் வரை அவ்விடத்தில் இருந்து செல்ல போவதில்லை எனவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

காவல் துறையினருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தொடர்ந்து பேனர் முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க