August 28, 2025
தண்டோரா குழு
ஆர்தா இந்தியா வென்ச்சர்ஸ் நிறுவனம் “வெற்றியாளர்களுக்கு மட்டும்” என்னும் ஆர்தா செலக்ட் ஃபண்ட் பங்குகள் விற்பனை நிறைவு பெற்றதாக இன்று அறிவித்தது.
குறிப்பிட்ட இலக்கான ரூ.330 கோடியை கடந்து 131 சதவீதம் அதிகரித்து இந்த பங்குகள் மீது முதலீட்டாளர்கள் ரூ.432 கோடியை முதலீடு செய்துள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.
இதன் காரணமாக இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பானது ரூ.1200 கோடியை கடந்து மைல் கல் சாதனை படைத்துள்ளது.ஆர்தா வென்ச்சர் பண்ட் I, ஆர்தா கான்டினூம் ஃபண்ட் மற்றும் விரைவில் தொடங்கப்படவுள்ள ஏவிஎப் II ஆகியவற்றில் ஆர்தாவின் தற்போதைய போர்ட்போலியோவான 135க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து சிறந்த 15% செயல்திறன் கொண்ட நிறுவனங்களில் ஆர்தா செலக்ட் ஃபண்ட் மூலம் திரட்டிய நிதியை இந்நிறுவனம்முதலீடு செய்ய உள்ளது.
இந்த நிதி அடுத்த நான்கு ஆண்டுகளில் 12–14 வெற்றியாளர் நிறுவனங்களுக்கு அதன் வளர்ச்சியை துரிதப்படுத்த,சந்தை வரம்பை விரிவுபடுத்தவும்தலா ரூ.20 கோடியை முதலீடு செய்யும். இந்நிறுவனம் ஏற்கனவே முதலீடு செய்த 33 நிறுவனங்கள் இன்று வரை சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகின்றன.இந்நிறுவனத்தின் முதல்ஆர்தா வென்ச்சர் ஃபண்ட் I, இந்தியாவின் முதலாவதாக செபியில் பதிவு செய்யப்பட்ட மைக்ரோவிசி, 2019 விண்டேஜ் வருமானத்தில் இந்தியாவில் முதலிடத்திலும்,உலகளவில் 2வது இடத்திலும் உள்ளது.அதை அடிப்படையாகக் கொண்டு தற்போது, ஆர்தா செலக்ட் ஃபண்ட் ஆரம்ப கட்டத்திலிருந்து வளர்ச்சிக்கு ஒரு மூலதனப் பாலத்தை உருவாக்கி, இந்தியாவின் “காணாமல் போன நடுத்தர” நிதி இடைவெளியை நிவர்த்தி செய்ய வெளியிடப்பட்டது.
இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் மூலதனம் மற்றும் செயல்பாட்டு ஆதரவு இல்லாததால் முடங்கிக் கிடக்கின்றன என்பதை கருத்தில் கொண்டு அதைப்போக்கும் வகையில் இந்த ஃபண்ட் திட்டத்தை ஆர்தா இந்தியா வென்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆர்தா வென்ச்சர் பண்ட் மற்றும் ஆர்தா செலக்ட் ஃபண்ட்டின் நிர்வாக பங்குதாரர் அனிருத் ஏ.தமானி கூறுகையில்,
எங்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களில் அந்த நிறுவனங்களின் விரிவாக்கப் பணிக்காக நாங்கள் இந்த நிதியை முதலீடு செய்ய இருக்கிறோம். இந்தியாவில் நம்பிக்கைக்குரிய முயற்சிகள் ஏராளமாக உள்ளன.ஆனால் இதில் பெரும்பாலானவை மூலதனம் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன. அதைப் போக்கும் வகையில் இந்த நிதி பயன்படுத்தப்படும். நிறுவனர் உரிமையையும் கவனத்தையும் பாதுகாக்கும் அதே வேளையில், உலகளவில் போட்டியிட எங்கள் வெற்றியாளர்கள் நிறுவனங்களுக்கு உத்வேகத்தையும், மூலதன வழிகாட்டுதல் மற்றும் செயல்பாட்டு ஆதரவு ஆகியவற்றையும் நாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
ஆர்தா செலக்ட் ஃபண்ட்டில் இந்திய குழும அலுவலகங்கள் மற்றும் மிக அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் நிதியின் மூலதனத்தில் 80 சதவீதம் முதலீடு செய்துள்ளனர். மீதமுள்ள 20 சதவீதத்தில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரிஷியஸ், ஹாங்காங், ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க ஸ்பான்சர் ஏஐவிஆகிய நாடுகளில் உள்ள உலகளாவிய வரையறுக்கப்பட்ட கூட்டு நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 10 சதவீத நிதி கிடைத்துள்ளது.
இந்த ஃபண்ட் திட்டத்தில் குறிப்பாக அதுல் கிர்லோஸ்கரின் குடும்ப அலுவலகம், டிஎஸ்பி குடும்ப அலுவலகம், ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ்,ஹிரா குழுமம் மற்றும் அனிகார்த் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது என்பது எங்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக ஆர்தா இந்தியா வென்ச்சர்ஸ் தெரிவித்துள்ளது.