• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆப்கானில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானப்படை குண்டு வீசிய பரபரப்பு வீடியோ காட்சி

April 15, 2017 தண்டோரா குழு

ஆப்கானில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீதுஅமெரிக்க விமானப்படை குண்டு வீசிய பரபரப்பு வீடியோ காட்சியை அமெரிக்க பாதுகாப்பு துறைவெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் குகை மீது அமெரிக்க விமானப்படை ‘ஜிபியு-43/பி மாப்’ என்ற 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராட்சத குண்டை நேற்று முன்தினம் வீசியது. “வெடிகுண்டுகளின் தாய் ” என அழைக்கப்படும் இந்த குண்டு வீச்சு தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 92 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்திலிருந்து குகை குறி வைக்கப்படும் காட்சி, அது வீசப்படும் காட்சி, வெடித்து சிதறியதும், ஒரு புகை மூட்டம் மேலே எழும் காட்சி ஆகியவற்றை தற்போது அமெரிக்க பாதுகாப்பு துறை வீடியோவாக வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க