• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆபிரகாம் லிங்கனின் நினைவு மண்டபத்தை சேதப்படுத்திய சமூக விரோதிகள்

August 16, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஆபிரகாம் லிங்கனின் நினைவு மண்டபத்தில் சமூக விரோதிகள் சிலர் தகாத வார்த்தைகளை சுவற்றில் எழுதி வைத்துள்ளனர். இதனை அதிகாரிகள் கண்டுபிடித்து நீக்கினர்.

அமெரிக்காவின் 16-வது குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனின் நினைவு மண்டபம், வாஷிங்டின் டி.சியில் உள்ளது. அதன் அருகில் ஸ்மித்சோனியன் நிறுவனம் இருக்கிறது. அந்த இரண்டு இடங்களிலும் சுவற்றில் தகாத வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.
அந்த வார்த்தைகளை நீக்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாஷிங்டின் டி.சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கியமாக பார்க்கும் இடம், குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லின்கனின் நினைவு மண்டபம் ஆகும். அந்த நினைவு மண்டபம் இரண்டாவது முறையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க