• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் – பிரதாப் ரெட்டி

December 16, 2017 தண்டோரா குழு

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அப்பல்லோ மருத்துவ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதாப் ரெட்டி,

மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோதே ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் இருந்தார். மிகவும் உயர்தர சிகிச்சை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டதால், அவர் குணமடைந்து வந்ததார், ஆனால் நோயின் தீவிரம் காரணமாக, எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார். மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது என்பதாலேயே, அதை வெளியில் கூறவில்லை என்றார்.

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், மேற்கொண்டு எதையும் கூற முடியாது., விசாரணை ஆணையத்திடம் இருந்து தமக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்றும், சம்மன் வந்தால் விசாரணைக்கு ஆஜராக தயார் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க