• Download mobile app
18 Mar 2026, WednesdayEdition - 3689
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் பட்டாசு விற்க தடைவிதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

October 16, 2018 தண்டோரா குழு

ஆன் லைனில் பட்டாசு விற்பனைசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சேக் தாவூத் என்பவர்உரிய உரிமங்கள் இல்லாமல் ஆன் லைனில் பட்டாசுகள் விற்பனை செய்வதைத் தடைசெய்யும்படி, வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடக் கோரி,சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.அம்மனுவில், விதிகளை முறையாக பின்பற்றாமல், ஆன்லைனில் பட்டாசு விற்கப்படுகிறது. ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் அதிகளவில் சீனப்பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டு விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன்,ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளதுடன், இது குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, சென்னை போலீஸ் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவ.,15க்கு ஒத்தி வைத்தார்.

மேலும் படிக்க