• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆன்மீக அரசியல் என்றால் இது தான் – ரஜினி பேட்டி

January 2, 2018 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ரசிகர்கள் சந்திப்பின் இறுதி நாளில் தனது அரசியல் பிரவேஷம் குறித்து அறிவித்தார். ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் என்பது ஆன்மீக அரசியல் என்று கூறினார்.

இதற்கிடையில், ரஜினியின் அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடி வந்தாலும்,அது என்ன ஆன்மீக அரசியல் என்று பலரும் குழப்பமடைந்தனர்.ஒருபுறம் ரஜினியை பாஜக பின்னால் இருந்து இயக்குவதாகவும் பலர் கருத்து தெரிவித்தனர். இதனால் சமூக வலைதளங்களிலும் ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து ஏராளமான மீம்ஸ் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி,
உண்மையான, நேர்மையான, நாணயமான, சாதி, மத சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மீக அரசியல்.அரசியல் அல்லாமல் பார்த்தால், ஆன்மீகம் ஆத்மாவுடன் தொடர்புடையது”என விளக்கம் அளித்தார்.

மேலும், மக்களிடம் என்னை முறையாக கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை கட்சி கொடி தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என ரஜினி கூறினார்.

மேலும் படிக்க