• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறகுகள் கொடுத்த ரவுண்ட் டேபிள் & லேடீஸ் சர்க்கிள் அமைப்புகள்

January 25, 2025 தண்டோரா குழு

கோயம்புத்தூர் வடக்கு லேடிஸ் சர்க்கிள் 11,ரவுண்ட் டேபிள் 20, மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100, ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ‘ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி’ என்ற நிகழ்வின் மூலம் சென்னையில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் இருந்து 15 குழந்தைகளை கோவைக்கு விமானத்தில் அழைத்து வந்து ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கினர்.

இது பற்றிய கூடுதல் விவரங்களை வழங்க ஆர்.எஸ்.புரம் புரூக்ஃ பீல்ட்ஸ் மாலில் உள்ள சேரன் ஹாலில்,கோவை ரவுண்ட் டேபிள் 20 -ன் தலைவர் அருண் குணசேகரன், மெட்ராஸ் ஆங்கரேஜ்ரவுண்ட் டேபிள் 100 -ன் தலைவர் நரேஷ், மற்றும் கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20 -ன் பொருளாளர் அரவிந்தன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி’ என்ற திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு சென்னையில் உள்ள எஸ் ஆர் எஸ் சர்வோதயா இல்லத்திலிருந்து பள்ளியில் படிக்கும் 15 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு விமானத்தில் காலை 9:30 மணிக்கு விமான நிலையத்தை அடைந்தனர்,

அவர்கள் ஈஷா யோகா மையம், ஸ்னோ ஃபேண்டஸி புரூக்ஃபீல்ட்ஸ் மாலுக்குள் உள்ள பனி பூங்கா ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர்,மேலும் இந்த மாலில் தங்களுக்கு தேவையான Stationery நோட், எழுத்து பொருட்கள் , ஷாப்பிங் செய்தனர்,மீண்டும் மாலை 6:30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

இந்த பயணத்தை துவக்கம் முதல் இறுதி வரை முழுமையாக அனுபவித்தனர், மேலும் அடுத்த ஆண்டு ஒரு விமானம் முழுவதும் குழந்தைகளை அழைத்துவர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் எனவும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க