• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர பள்ளி கல்வித்துறை அனுமதி

June 26, 2018 தண்டோரா குழு

ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் பகவான்.இவர் திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணி இடமாறுதல் செய்யப்பட்டார்.இதனை அறிந்த அப்பள்ளி மாணவ,மாணவிகள் அவர் வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அவரை விடாமல் கதறி அழுத காட்சி பார்ப்போரையும் கண்கலங்க வைத்தது.மேலும்,இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் பகவான் தங்கள் பள்ளியை விட்டு செல்லக்கூடாது என மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில்,ஆசிரியர் பகவான் வெள்ளியகரம் அரசு உயர்நிலை பள்ளியிலேயே பணியை தொடர கல்வித் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க