• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி

January 8, 2019 தண்டோரா குழு

அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டு கூறிக் கொண்டதால், இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலோக்வர்மா மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில், அலோக் வர்மா, மத்திய அரசு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தரப்பு வாதங்கள் முடிவடைந்து, கடந்த மாதம் 6ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இல்லாத நிலையில்,நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வழங்கினார்.

இந்த தீர்ப்பில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது.அலோக் வர்மா தொடர்ந்து சிபிஐ இயக்குனராக செயல்படுவார், விசாரணை கமிட்டி இறுதிமுடிவு எடுக்கும் வரை அலோக் வர்மா முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலம், மத்திய அரசு சம்பந்தமான எந்த வொரு கொள்கை முடிவுகளையும் அலோக் வர்மா எடுக்கக்கூடாது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் மத்திய அரசு தலையிட கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு காரணாமக CBI தற்காலிக இயக்குனராக உள்ள நாகேஸ்வரராவ் பதவி கேள்விக்குறியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க