• Download mobile app
24 Nov 2025, MondayEdition - 3575
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அற்புதமான சுவையில் அருண் ஐஸ்க்ரீம்–ன் ஐஸ்க்ரீம் டோனட்கள் அறிமுகம்

November 24, 2025 தண்டோரா குழு

உண்மையான பால் மற்றும் க்ரீம்–ஐ பயன்படுத்தி பல்வேறு சுவைகள் மற்றும் வடிவங்களில் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம்களுக்காக இந்தியா முழுவதும் பிரபலமான அருண் ஐஸ்க்ரீம், ஒரு புதிய தயாரிப்பை அருண் ஐஸ்க்ரீம் டோனட் என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

கசாட்டா ஸ்லைஸ், ஐகோன், இபார், ஸ்பைரல், பைட்ஸ், பால் ஐஸ் க்ரீம், ஐஸ் க்ரீம் சான்ட்விச் மற்றும் புஷ்ஷப் காட்டன் கேன்டி போன்ற சுவையான, மிகப்பிரபலமான தயாரிப்புகளை அறிமுகம் செய்து ஐஸ்க்ரீம் வகையினத்தில் இந்நாட்டில் முதன்மை நிறுவனமாக அருண் ஐஸ்க்ரீம் அறியப்படுகிறது.

இந்த சமீபத்திய அறிமுகமான புதிய தயாரிப்பு, ஐஸ்க்ரீம்கள் உலகில் ஒரு சுவையான திருப்பத்தை அறிமுகம் செய்திருக்கிறது. புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தருகின்ற மற்றும் திகட்டாத, சுவையை அள்ளித் தருகின்ற ஒரு தயாரிப்பை விரும்புகின்ற நுகர்வோர்களை மெய்மறக்கச் செய்யும் விதத்தில் இந்த ஐஸ்க்ரீம் டோனட் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அருண் ஐஸ்க்ரீமின் இந்த புதிய தயாரிப்பு நுகர்வோரை மகிழ்விக்கும் என்பது நிச்சயம்.

உயர்தரம் மற்றும் புதுமையான உத்திகளை அறிமுகம் செய்வதில் ஆர்வம் ஆகியவற்றிற்காக புகழ்பெற்றிருக்கும் இந்த பிராண்டு, பல தலைமுறைகளாக ஆனந்தத்தில் ஆழ்த்தி வருவதோடு, இளம் தலைமுறையினரோடு தனது புதுமையான தயாரிப்புகள் வழியாக, ஆழமான பிணைப்பை தந்திருக்கிறது.நாட்டின் பல்வேறு முக்கியமான பிராந்தியங்களில் நடத்தப்பட்ட சந்தை ஆய்வுகளில் அருண் ஐஸ்க்ரீம் – ன் டோனட் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பது அறியப்படுகிறது.

ஐஸ்க்ரீம் டோனட்டின் தனித்துவமான சுவையின் கலவையையும், அதன் க்ரீமி வடிவமைப்பையும் மற்றும் பார்த்தவுடன் ஈர்க்கும் தோற்றத்தையும் நுகர்வோர்கள் பாராட்டி மகிழ்கின்றனர். நேர்த்தியான அளவில், கவர்ச்சிகரமான தோற்றத்தில் கிடைக்கும் அருண் ஐஸ்க்ரீம் டோனட் எந்த நேரத்திலும், விரும்பி சாப்பிடக்கூடியதாக திகழ்கிறது. மகிழ்ச்சிகரமான பார்ட்டிகளுக்கும், விருந்துகளுக்கும், குடும்பமாக ஒருங்கிணைந்து, அருந்துவதற்கும் ஐஸ்க்ரீம் டோனட் மிகப் பொருத்தமானது.

வார இறுதி நாட்களில் ரிலாக்ஸ் செய்யும்போது, கேளிக்கையோடு சுவையையும் சேர்த்து அனுபவிப்பதற்கும் ஏற்ற விருந்தாக இது இருக்கும். ரூ.10/- என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அருண் ஐஸ்க்ரீம் டோனட்கள், அனைத்து ஹெச்ஏபி டெய்லி மற்றும் அருண் ஐஸ்க்ரீம் சில்லறை விற்பனையகங்கள் அனைத்திலும் பெல்ஜியம் சாக்லேட் மற்றும் குக்கீ அண்டு க்ரீம் வேரியண்ட்கள் / சுவைகளில் கிடைக்கிறது.

மேலும் படிக்க