• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ!

August 22, 2017 தண்டோரா குழு

காது,மூக்கு, தொண்டை, குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்யும் ரோபோவை இங்கிலாந்து விஞ்ஞானிகள் அறிமுகம் செய்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில், ‘ரோபோ’ என்னும் இயந்திர மனிதன், அனைத்து துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ரோபோக்கள் மனிதர்களின் கடினமான வேலைகளை எளிதில் செய்து விடுகிறது.

தற்போது, அறுவை சிகிச்சை செய்யும் வகையில் ‘எவர்சியஸ்’ என்னும் ஒரு புதிய ரோபோவை, இங்கிலாந்தைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மனித உருவில் தயாரிக்கப்பட்ட ‘எவர்சியஸ்’ ரோபோ காது, மூக்கு, தொண்டை மற்றும் குடலிறக்கம் ஆகிய நோய்கள் சம்பந்தமான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிக்கும் திறனுடையது.

“அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்த ரோபோவை வாங்க வேண்டுமானால்,சுமார் 2.5 மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. அதேபோல, ரோபோவை பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் 3,800 டாலர் அதிகமாக வசூலிக்க வேண்டியுள்ளது” என்று கேம்பிரிட்ஜ் மெடிக்கல் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க