• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு – திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்

April 8, 2019 தண்டோரா குழு

அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை உள்ளது. 1998-ல் வைக்கப்பட்ட இந்த சிலையின் தலைப்பகுதியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.இன்று அதிகாலையில் சிலையைக் கடந்து சென்ற மக்கள் பலர் சிலையின் தலை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தகவல்அறிந்து வந்த போலீசார் சிலையை உடைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில்,பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட பகுதியில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் என முழக்கம் இட்டனர். பரபரப்பான தேர்தல் நேரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலை அமைந்துள்ள இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க