• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா !

November 27, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழாவை கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர் டாக்டர் உதயகுமார் 2019-2020ம் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.அர்ஜுன் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர்ஆர்.சூரியநாராயணன், விழாவிற்கு தலைமை வகித்து பட்டதாரிகளை வாழ்த்தி பேசினார்.

இவ்விழாவில் முதன்மை விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தின் துணைவேந்தருமான டாக்டர்.பி. மன்னர் ஜவஹர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

பின்னர் மாணவர்களிடையே அவர் பேசுகையில்,

“இன்றைய மாணவர்களே ஒரு நாட்டின் நாளைய தலைவர்கள் என்றும் மாணவர்களின் பண்புகளே மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தையும் நாட்டின் வேகமான வளர்ச்சியையும் தெளிவாகத் தீர்மானிக்கின்றன” என்றார்.

மாணவர்கள் 4 வருடங்கள் இங்கு படித்தால் 40 வருடங்களில் வருடங்களுக்கு மேல் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் கற்று தருவது 10
சதவீதம் தான், மாணவர்கள் சிந்தனைகளில் 90 சதவீதம் கற்றுக் கொள்கின்றனர். வாய்ப்புகளுக்காக காத்திருக்க கூடாது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்ற சிறந்த மாணவர்களை பாராட்டினார். பட்டதாரிகளை அவர்களின் சிறப்புத் துறையில் “தொழில்நுட்பம் மற்றும் தரம்” மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள ஊக்குவித்தார்.

கெளரவ விருந்தினர் புகழ்பெற்ற பேச்சாளர் மற்றும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் & நிர்வாக அறங்காவலர் ஜே.சுஜித் குமார், பேசுகையில்,

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அவர்களின் ஆசீர்வாதங்கள் அவர்களின் வாழ்வில் எவ்வாறு சிறந்து விளங்குகிறது என்பதையும் வலியுறுத்தினார்.மேலும், முதலில் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.ஒவ்வொரு பட்டதாரிகளும் சமூக சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்று சொல்பவர்களிடம் வேறு என்ன படித்தால் வேலை கிடைக்கும் என்று கேட்க வேண்டும்என்றார்.

பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மாணவர்கள் 153 பட்டம் பெற்றனர்.மேலும்,விழாவில் பேராசிரியர்கள்,பெற்றோர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க