• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3%ஆக உயர்வு: முதல்வர் அறிவிப்பு

October 16, 2018 தண்டோரா குழு

அரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை 2% லிருந்து 3% ஆக முதல்வர் உயர்த்தியுள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியதற்கான பாராட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு கல்வித்துறைபோல் விளையாட்டுத் துறைக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. கிராமங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஒவ்வொருவரிடமும் உள்ள திறமைகளை ஆராய்ந்து ஊக்கம் அளிப்பது அரசின் கடமை. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது . நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான உள்ஒதுக்கீடு 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படும். விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேரந்த விளையாட்டு வீர்ர்கள் முதலிடத்திற்கு வர தமிழக அரசு தேவையான அனைத்து உதவிகளை செய்யும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

மேலும் படிக்க