• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சர்வதிகாரி போல செயல்பட்டு வருகிறார் – நா.கார்த்திக்

June 4, 2020 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி துறையில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருவதாகவும், பீளிச்சிங் பவுடர் வாங்கியதில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு முறைகேடுகள் செய்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி துறையில் ஊழல் நடைபெற்று வருகிறது. பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் 200 கோடி ஊழல் நடைபெற்று உள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டுதலின் பேரில் திமுகவினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கில் கைது செய்கின்றனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சர்வதிகாரி போல செயல்பட்டு வருகிறார். திமுகவினர் மீது தொடர் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி வருகின்றனர்.தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முறையாக உணவுகள் கூட வழங்கபடவில்லை. அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கோவையில் நாளை உள்ளாட்சி அமைப்புகள் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க