• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீக்கம், தினகரன் அறிவிப்பு

August 23, 2017 தண்டோரா குழு

அதிமுக(புரட்சி தலைவி அம்மா ) கட்சி பொறுப்பிலிருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பல நீர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அம்மா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ரங்கசாமி, கட்சியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்ட பொருளாளர் பதவியில் இருந்து எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பொறுப்பில் இருந்து என்.அழகர்சாமி நீக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு பதில் விருதுநகர் மாவட்ட பொருளாளராக டி.முத்தையா, விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளராக சி.சுப்ரமணியன், மாவட்ட இணைச் செயலாளராக என்.அழகர்சாமி, புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளராக கே.விவேகானந்தன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் மா.சேகர் நியமிக்கப்படுகிறார். மதுரை மாவட்ட புறநகர் செயலாளர் பதவியில் இருந்து ராஜன் செல்லப்பா நீக்கப்படுகிறார். அவருக்கு பதில் இ.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க