• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் நண்பனுக்கு உதவிய 8 வயது சிறுவன்

July 26, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் நன்கொடை மூலம் கிடைத்த பணத்தை கொண்டு நடக்க முடியாத நண்பனுக்கு சக்கர நாற்காலி வாங்கி தந்த 8 வயது சிறுவனின் செயல் பலருக்கும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் தந்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகணத்தில் போவே என்னும் இடத்தில் வசிக்கும் 8 வயது பவுல் புர்நெட் மற்றும் காம்டன் 3ம் வகுப்பில் படித்து வருகின்றனர். இருவரும் மழலை பள்ளியில் படிக்கும்போதே நெருங்கிய நண்பர்கள். இருவரும் மெக்டோனல்ட் உணவகத்திற்கு சென்று ‘ஹாப்பி மீல்’ உணவை உண்பதும், மாலையில் அருகிலிருக்கும் பூங்காவிற்கு செல்வதும் என்று எப்போதும் ஒன்றாகவே இருப்பார்.

காம்டன் பிறக்கும்போது அவனுடைய முதுகு தண்டு எலும்பில் கட்டி இருந்தது. அந்த கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். ஆனால், அவனுக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் அவனால் நடக்க முடியாமல் போய்விட்டது. காம்டனின் பெற்றோர் அவனுக்கு சக்கர நாற்காலியை வாங்கி தந்துள்ளார். ஆனால் அந்த நாற்காலி அதிக கனமாக இருந்ததால் காம்டனால் அதை எளிதில் பயன்படுத்த முடியாமல் கஷ்ட்டப்பட்டான்.

அதன் பிறகு, அதிக கனமில்லாத சக்கர நாற்காலியை வாங்க அவனுடைய பெற்றோர் திட்டமிட்டனர். ஆனால், அதை வாங்கும் அளவிற்கு காம்டேனின் பெற்றோரிடம் தேவையான பணமில்லை.

இதை அறிந்த காம்டேனின் நண்பன் பவுல், தன்னுடைய நண்பனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று முடிவு செய்தான். அப்படிபட்ட நேரத்தில்தான் “Gofundme” என்னும் ஆன்லைன் வலைத்தளம் மூலம் நிதி திரட்டுவதை குறித்து யூடியுப் மூலம் தெரிந்துக்கொண்டான். தனது நண்பன் காம்டனின் பெற்றோரால் அவனுக்கு சக்கர நாற்காலி வாங்க முடியவில்லை, அதை வாங்க நிதி திரட்ட வேண்டும் என்று பவுல் அவனுடைய பெற்றோரிடம் கூறி, நிதி திரட்ட ஆரம்பித்தான்.

சில வாரங்களுக்குள் பவுலுக்கு 5,5௦௦ டாலர் கிடைத்தது. காம்டனுக்கு சக்கர நாற்காலி வாங்கி கொடுக்க, அந்த பணத்தை காம்டனின் பெற்றோரிடம் கொடுத்துள்ளான்.காம்டனுக்கு ஒரு நல்ல சக்கர நாற்காலியை வாங்கி தர உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்று காம்டனின் தாயார் தெரிவித்தார்.

மேலும் படிக்க