• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதியில்லை – டிரம்ப்

July 27, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் திருநங்கைகள் ராணுவத்தில் சேர அனுமதியில்லை என்று அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பாரக் ஒபாமா, அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதற்கு பலர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனால், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நாட்டின் குடியரசு தலைவர் பதவியை ஏற்ற பிறகு, பல அதிரடி திட்டங்களை கொண்டு வந்தார்.

திருநங்கைகள் அமெரிக்க ராணுவத்தில் சேருவதை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கடந்த ஜூன் மாதத்தில் தெரிவித்திருந்தார். தற்போது, அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதியில்லை என்று அதிரடி அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.

மேலும் “எனது ஜெனெரல்கள் மற்றும் ராணுவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு தான்,இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்றலாம் என்று முன்னால் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்த திட்டத்தை ரத்து செய்துள்ளோம். அமெரிக்க நாட்டின் எந்த ராணுவ பிரிவிலும் திருநங்கைகள் சேர அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவம் தீர்க்கமான மற்றும் அதிகமான வெற்றிக்கு கவனம் செலுத்த வேண்டும். ராணுவத்தில் திருநங்கைகளால் ஏற்படும் அதிக மருத்துவ செலவுகளுக்கு இனி இடமில்லை” என்று தனது ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க