• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்பநாயக்கன்பட்டியில் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் – குவியும் பாராட்டுகள்

March 27, 2023 தண்டோரா குழு

கோவை அப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவரின் மனைவி ஊர்மிளா (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை வீட்டில் இருக்கும் பொழுது பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக சூலூர் அரசு மருத்துவணையில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊர்மிளா வீட்டிற்கு சென்று பார்த்த போது குழந்தையின் தலை வெளியே வந்தது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் பாலமுரளி பைலட் இம்ரான் கான் உதவியுடன் பிரசவம் பார்த்தார்.அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய் சேய் இருவரையும் சேர்த்தனர்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்

அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர் களுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க