• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அன்பை குறித்து பேச மக்கள் முன்வரவேண்டும் – அர்னால்ட்

August 16, 2017 தண்டோரா குழு

வெறுப்பை எதிர்த்து, அன்பை குறித்து அதிகம் பேச மக்கள் முன் வர வேண்டும் என்று பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை வெளிபடுத்தும் விதமாக பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது. அந்த பேரணி வன்முறையாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட், வெறுப்பு தன்மைக்கு எதிராக போராடும் அமைப்பான ‘சைமன் அமைப்புக்கு 10,0000 டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

“வெறுப்பை எதிர்த்து, அன்பை குறித்து அதிகம் பேச மக்கள் முன்வரவேண்டும். வெறுப்பை காட்டும் மக்கள் ஒருபோதும் வெற்றி அடையமாட்டார்கள். அன்பை ஆதரிக்கும் எங்களுடைய குரல் அதிகமாகவும், சத்தமாகவும், தெளிவாகவும் உள்ளது.அமெரிக்க ஒருபோதும் வெள்ளையர்கள் மட்டும் இருக்கும் நாடாக இருக்காது.” என்று அர்னால்ட் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க