September 12, 2018
கோவை காருண்யா பல்கலைகழகம் அனுமதியன்றி சிறுவாணி ரோடில் உள்ள மரங்களை வெட்ட முயற்சித்தனர் அங்கு வந்த இயற்கை ஆர்வலர்கள் சிலர் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கோவை சிறுவாணி ரோட்டில் காருண்யா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைகழகத்தை சேர்ந்த சிலர் கல்லூரியின் முன்பு உள்ள கேட்டின் அருகில் இருந்த மரத்தை எந்த ஒரு அனுமதியன்றி வெட்ட முயன்றனர். அப்போது அங்கு வந்த இயற்கை ஆர்வலர்கள் சிலர் அதனை தடுத்து நிறுத்தி அவர்களிடம் கேள்வி கேட்டனர்.
இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,
பல்கலைகழகத்தினை சேர்ந்த சிலர் மரங்களை வெட்டி கொண்டு இருந்தனர்.அதுகுறித்து நாங்கள் கேட்டதற்கு கல்லூரியில் இருக்கும் கேமராவை இந்த மரம் மறைப்பதால் மரத்தை வெட்டுகிறோம் என்றனர்.இதையே தொடர்ந்து இவர்கள் செய்து வருகிறார்கள்.எந்த ஒரு அனுமதியன்றி இங்கு இருக்கும் மரத்தை வெட்டி கொண்டே போகின்றார்கள்.இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மரமும் ஒரு உயிர் தான் அதனை காக்க வேண்டியது நம் கடமை.இதுபோன்று அனுமதியன்றி மரத்தை வெட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.