• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக பாஜக இடையே ஏற்பட்ட மோதல் வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜரான வானதி ஸ்ரீனிவாசன் !

November 11, 2021 தண்டோரா குழு

2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக இடையே ஏற்பட்ட மோதல் வழக்கு வானதி சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர்களாக பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனனும் போட்டியிட்டனர்.தேர்தல் பிரச்சாரம் முடிந்து வானதி சீனிவாசன் கடைவீதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற போது அதிமுகவை சேர்ந்த முன்னாள் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் ஆதிநாராயணனுக்கும் பாஜக வினருக்கும் இடையே எற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

அப்போது பாஜகவினர் தன்னை தாக்கியதாக கூறி ஆதிநாராயணன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடைவீதி போலிசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது இன்று கோவை கூடுதல் நீதிமன்றம் எண்5 ல் நடைபெற்ற பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் நேரில் ஆஜராகினார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க