• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

March 2, 2019

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும்6 ஆம் தேதி புதன்கிழமை வண்டலூர் அருகே அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது, அ.தி.மு.க. தலைமையகத்துக்கு வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஓ.பி.எஸ். உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்வது என ஒப்புக்கொள்ளப்பட்டது. 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் ஓபிஎஸ்சும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணமசாமியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்,

அப்போது மக்களவை மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

பின்னர் பேசிய கிருஷ்ணசாமி,

நாடாளுமன்ற தேர்தலில் மோடி, அமித்ஷா தலைமையில் தேசிய முற்போக்கு கூட்டணியில் அதிமுக மற்றும் பாமக உள்ள நிலையில் இந்த கூட்டணியில் புதிய தமிழகமும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. எங்களுக்கு ஒதுக்கப்படும் அந்த ஒரு தொகுதியில் தேர்தல் ஆணையத்திடம் தனி சின்னம் கேட்டு வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் எனக்கூறினார்.

மேலும் படிக்க