• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக கூட்டணியில் இருந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக தமிமுன் அன்சாரி அறிவிப்பு

February 19, 2019 தண்டோரா குழு

அதிமுக கூட்டணியில் இருந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

மக்களைவை தேர்தலில் அதிமுக பாஜக இடையே இன்று கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அதிமுக கூட்டணியில் பாஜகவில் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி 21 சட்டமன்ற இடைதேர்தலிலும் பாஜக அதிமுக ஆதரிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வுடன் அமையும் கூட்டணியில் நாங்கள் இடம் பெற மாட்டோம் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறோம். சமூக நீதி, சமூக நல்லிணக்கம் , சமத்துவ ஜனநாயகம் என்பது எமது கொள்கையாகும். தமிழகத்தின் வாழ்வாதாரங்கள், தமிழர் உரிமைகள் , பின்தங்கிய சமூகங்களின் நலன்கள் ஆகியவற்றை முன்வைத்தே எமது அரசியல் தொடரும். மனிதநேய ஜனநாயக கட்சியின் அடுத்தக் கட்ட அரசியல் நிலைபாடு ,குறித்து எதிர்வரும் பிப்ரவரி 28 அன்று சென்னையில் கூடும் தலைமை நிர்வாக குழுவில் முடிவெடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க