August 10, 2017
தண்டோரா குழு
அதிமுக துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது.
அதில் அதிமுக துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது. டிடிவி தினாகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது. அவர் வழங்கிய பதவிகள் எதுவும் செல்லாது. இதனை கட்சி நிர்வாகிகள் பொருட்படுத்த வேண்டாம். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சியை வழிநட த்துவார்கள் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.