• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியிலிருந்து வேண்டுமென்றே நீக்கிவிட்டனர் – முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி

July 3, 2018 தண்டோரா குழு

அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியில் இருந்து தன்னை வேண்டுமென்றே நீக்கம் செய்து விட்டனர் தொழிற்சங்க சட்ட விதிகளின்படி இவர்கள் செய்தது தவறு என முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி.இவர் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அண்ணா தொழிற்சங்க சட்ட விதிகளின்படி எனக்கு முறையாக எந்தவிதமான விளக்கமும் அறிக்கைகள் வழங்கவில்லை என்றும்,என்னை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து தவறு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் முறையாக சம்மன் அனுப்பி விளக்கம் அளிக்க வேண்டும் அவர்கள் அதை செய்யாமல் விடுவித்துள்ளனர்.என்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியில் பணியமர்த்தினார்.
ஆனால் இவர்கள் நான் உறுப்பினராக இல்லை என்று கூறுகிறார்கள்.அது முற்றிலும் தவறு தொழிற் சங்க உறுப்பினர் அல்லாதவர் ஒருவர் எப்படி அந்த பதவியில் இருக்க முடியும்.

கடந்த முறை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது நான் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு நான்காயிரம் ரூபாய் வாங்கி கொண்டிருந்தவர்களை 12 ஆயிரம் வரை உயர்த்தினேன்.மேலும் நான் தொழிற்சங்க வங்கி கணக்கில் 12 மற்றும் 18 கோடி வரை சேர்த்து வைத்துள்ளேன். இவர்கள் தொழிற்சங்கத்தை நடத்த முடியாது எனவே என்னை வேண்டுமென்றே அந்த பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர்.

நான் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதால் அந்த அந்த பொறுப்பிற்கு மற்றவர்களை இவர்களால் நியமிக்க முடியாது.நிச்சயமாக அந்த வழக்கு எனக்கு சாதகமாக வரும்,தொழிற்சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் என் பக்கம் தான் உள்ளனர்.

தற்போது டிடிவி தினகரன் அணியில் எனக்கு மீண்டும் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதற்கு டிடிவி தினகரன் அவர்களுக்கும் சசிகலா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மேலும் படிக்க