• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அண்டார்டிகாவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு Fruit Cake கண்டுபிடிப்பு

August 11, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்தின் Antartica Heritage Trustயைச் சேர்ந்தவர்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு அண்டார்டிகாவில் பழகேக்(Fruit Cake) ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 1910ம் ஆண்டு முதல் 1913ம் ஆண்டு வரை, அண்டார்டிகாவின் புவியியல் நோக்கம் மற்றும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள, இங்கிலாந்தை சேர்ந்த ராபர்ட் பால்கன் ஸ்காட் என்பவர் தலைமையின் கீழ், ஆய்வாளர்கள் அன்டார்ட்டிகாவிற்கு பயணம் மேற்கொண்டனர். அந்த பயணத்திற்கு Terra Nova Expedition என்று பெயர். அண்டார்டிகா சென்ற அவர்கள் கேப் அடரே என்னும் இடத்தில் ஒரு குடிசையை அமைத்து, அதில் தங்கியிருந்தனர்.

ஸ்காட் மற்றும் மற்ற ஆய்வாளர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து, ஹுன்ட்லே அண்ட் பால்மர் என்னும் பிரிட்டிஷ் பிஸ்கட் கம்பெனி உருவாக்கி தந்த பழ கேக்(Fruit Cake) ஒன்று ஒரு சிறிய பெட்டியில் இருப்பதை கண்டுபிடித்தனர். அதை மீண்டும் இங்கிலாந்துக்கு எடுத்து வந்தனர்.

அதை சோதனை செய்தபோது, இன்றும் சுவையுடனும் கெட்டுப்போகாமலும் இருப்பது தெரிய வந்துள்ளது. அண்டார்டிகாவிலிருந்து எடுத்து வரப்பட்ட மற்ற 1,500 தொல்பொருள்களுடன் அந்த கேக்கையும் Antartica Heritage Trust பாதுகாத்து வருகிறது.

“இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இந்த பழ கேக் கெட்டுபோகாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அண்டார்டிகா போன்ற குளிர் பிரதேசங்களுக்கு செல்பவர்கள் உயர் ஆற்றல் தரும் உணவான பழ கேக்கை எடுத்து செல்ல விரும்புவார்கள்” என்று Antartica Heritage Trust யின் பாதுகாப்பாளர் ஒருவர் தெரிவித்தார்

மேலும் படிக்க