• Download mobile app
28 Jun 2026, SundayEdition - 3791
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அசாம் அரசு மருத்துவமனையில் பெரும் சோகம் – 6 நாட்களில் 15 பிஞ்சு குழந்தைகள் உயிரிழப்பு!

November 10, 2018 தண்டோரா குழு

அசாம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் ஜோர்ஹட் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களில் பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறந்து சில தினங்களே ஆனா 15 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்து உள்ளன. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், குழந்தைகள் உயிரிழப்புகள் மருத்துவமனையின் அலட்சியத்தால் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், சில நேரங்களில் மருத்துமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும், இதனால் எளிதில் நோய் தோற்று பரவக்கூடியதால் நோய் தோற்று உருவாகி சில குழந்தைகள் இறந்து இருக்கலாம். மோசமான உடல்நிலையுடன் பிறந்ததே, சில குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம். உயிரிழந்த குழந்தைகளில் 10 பேர் பிறக்கும்போதே குறைவான எடையுடன் பிறந்துள்ளனர். மற்ற மூன்று குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததனர். சில கர்ப்பிணிகள் காலங்கடந்து மருத்துவமனைக்கு வந்ததும், குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் மாநில சுகாதாரத்துறை இதுகுறித்து விசாரிக்க உத்திரவிட்டுள்ளது. அதைபோல் அம்மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலும் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் 6 நாட்களில் 15 பிச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க