• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது உண்மையே விசாரணை அறிக்கையில் தகவல்

October 9, 2019 தண்டோரா குழு

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலா லஞ்சம் கொடுத்து சலுகை அனுபவித்தது தெரியவந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறையில் அவருக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் கூறப்பட்டன. சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபா பரப்பன அக்ரஹார சிறையில் நடந்த முறைகேட்டை அம்பலபடுத்திய நிலையில்
முறைகேடு புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், அரசு சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை குழு இந்த உண்மையை கண்டறிந்துள்ளது. விசாரணை குழு ஆய்வில், சிறை அதிகாரி சத்ய நாராயணராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததும், சிறைக்கு வெளியே ஷாப்பிங் சென்றதும் நிரூபணமாகியுள்ளது. அதே சிறையில் இன்று காலை குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 37 கத்திகள் கைப்பற்றப்பட்டன. கைதிகள் கைபேசிகள் வைத்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க