• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்ததில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கமும் பங்கேற்கபோவதாக அறிவிப்பு

December 28, 2018 தண்டோரா குழு

அகில இந்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்ததில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கமும் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளனர்.

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தாமஷ் கிளப்பில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பாக வேலை நிறுத்த மாநாட்டிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் அதன் கூட்டமானது தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவருமான,ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரான செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் , மாதம் ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்கிடல், பணி மாறுதல், செய்திடல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டத்தை தொடர்ந்து ஜனவரி 8,9 அகில இந்திய தொழிற்சங்கத்தினர் உடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மாநாடு நடத்த போவதாக தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் வங்கி பணியாளர்கள் சங்கம், மத்திய மாநில அரசுபணியாளர்கள் கூட்டமைப்பு,இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு, பொதுத்துறை நிறுவங்களின் சங்க பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க