• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரெய்கி என்ற பயிற்சி வகுப்பு சார்பாக எனர்ஜி நெஸ்ட்ஸ் இரண்டு நாட்கள் கண்காட்சி

February 18, 2024 தண்டோரா குழு

ரெய்கி என்ற பயிற்சி வகுப்பு சார்பாக எனர்ஜி நெஸ்ட்ஸ் இரண்டு நாட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் அற்புதம் செய்யும் அதிசய பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கப்பட்டது.ரெய்கி என்ற பயிற்சி வகுப்பு சார்பாக எனர்ஜி நெஸ்ட்ஸ் நிறுவனர் டாக்டர்.A.மீனாட்சி MBBS DGO ஆசியுடன் கண்காட்சி சனி மற்றும் ஞாயிற்றுகிழமை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

சக்தி வாய்ந்த கற்கள்,பிரேஸ்லெட்டுகள், மாலைகள்,பிரமிடுகள்,டாலர்கள்,பால்கள், பாதுகாப்பிற்கான கற்கள்,குவான் இன் சிலைகள், இமயமலை உப்பு பிரமிடுகள், லாஃபிங் புத்தா சிலைகள்,குழந்தைகள் படிப்பிற்கு அமிதிஸ்ட் கற்கள், ஸ்டடி டவர்கள், இங்கிலாந்து பாச்ஃபிளவர் மருந்துகள் என பல்வேறு சக்தி வாய்ந்த பொருட்கள் இக்கண்காட்சியில் அமைந்துள்ளது.

மேலும்,எல்லாத் தேவைகளுக்கும் நறுமணமான ஆயில்.ஊதுபத்திகள், சாம்பிராணி,மஞ்சள்தூள், பச்சை கற்பூரம், பல்வேறு பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றது.மேலும் ரெய்கி மூலமாக வாரத்தில் இருமுறை ஆன் – லைன் வகுப்பு நடைப்பெறும் மற்றும் சென்னை, பெங்களுர்,மதுரை போன்ற பகுதிகளில் எனர்ஜி ரெஸ்ட்ஸ் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதில் எனர்ஜி ரெஸ்ட்ஸ் மேலாளர் கணேஷ்பாபு, ரமேஷ், அருண்,சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க