• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைகழகம் ஆன்லைன் வாயிலாக, வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது – துணைவேந்தர்

April 30, 2021 தண்டோரா குழு

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பு கருதி, பாரதியார் பல்கலைகழகம் ஆன்லைன் வாயிலாக, வகுப்புகளை மிக சிறப்பாக நடத்தி வருவதாக பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் காளிராஜ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மிக வேகமாக கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால்,இதனை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை கோவை பாரதியார் பல்கலைகழகம் ஊக்குவித்து வருகிறது.இந்நிலையில் பல்கலைகழக வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு குறித்த இணையதள நிகழ்வு பாரதியார் பல்கலைகழகத்தில் நடைபெற்றது.

பதிவாளர் முனைவர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் காளிராஜ் துவக்கி வைத்தார். இதில் மருத்துவர் பக்தவத்சலம் கலந்து கொண்டு கோவிட் பாதுகாப்பு குறித்து பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் டாக்டர் காளிராஜ்,

கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில் பாரதியார் பல்கலைக்கழகம் இது குறித்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு,நாட்டு நல பணி திட்டத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு இலவச கப சுர நீர்,மூலிகை முக கவசங்கள் வழங்கி,சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்து கூறுவதாக தெரிவித்தார்.

மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை பொறுத்த வரை முது நிலை கலை பிரிவு மாணவர்களுக்கு இணையவழியாகவே வகுப்புகள் நடத்துவதாக கூறிய அவர்,அறிவியல் மற்றும் சில பிரிவுகளுக்கு மட்டும் செய்முறை வகுப்புகளை விரைந்து நடத்துவதாக தெரிவித்தார். ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முனைவர் மணிமேகலன், முனைவர் வசந்த், நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க