• Download mobile app
25 Dec 2025, ThursdayEdition - 3606
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜவுளித் தொழில் வளர்ச்சியில் வங்கிகளின் முக்கிய பங்கு குறித்து கலந்துரையாடல்

January 31, 2020

இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பும் பிக்கியும் இணைந்து ஜவுளித் தொழில் வளர்ச்சியில் வங்கிகளின் முக்கிய பங்கு பற்றியும் தற்போது மாறிவரும் வணிகச் சூழலில் புதிய ஒழுங்கு முறைகள் பற்றியும் வங்கிகளின் மேலாண்மை உயர் அதிகாரிகளுடன் இணைந்து புதிய ஆலோசனை மற்றும் தீர்வு காண கலந்துரையாடல் நிகழ்ச்சியை கோவையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்திய ஜவுளி கூட்டமைப்பை சேர்ந்த 110 ஸ்பின்னிங்,லிவிங்,மற்றும் அப்போல் பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இந்திய வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பத்மஜா சந்துருவுடன் நடந்த கலந்துரையாடலில் ஜவுளித் துறையில் தற்போது உள்ள தேவைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டன. ஐவுளித்துறையினருடன் பேசிய இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் தனது வங்கி ஜவுளித்துறைக்கு பல்வேறு வகையில் உதவி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்திற்கு சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரித்து தொழில் செய்ய கடனுதவி வழங்கப்பட உள்ளதாகவும் சிறு குறுந்தொழில்களை விரிவு படுத்த தேவையான மூலதனத்திற்கும், இந்தியன் வங்கி கடன் உதவி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதுவரை 48 ஆயிரம் யூனிட்டுக்கு ஆயிரத்து 700 கோடி ரூபாய் மறுசீரமைப்புக்கான கடன் கொடுக்கப் பட்டுள்ளதாகவும்,மேலும் 400 யூனிட்டுகளுக்கு கடன் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.இந் நிகழ்ச்சியில் சென்னை இந்திய வங்கியின் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பிரிவு பொது மேலாளர் கே எஸ் சுதாகர் ராவ்,கோவை கள பொது மேலாளர் ஜபியா பரிட் உள்பட ஜவுளித்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க