• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பிரபலமான கஃபே டி கோவை பீளமேட்டில் திறப்பு !

November 3, 2025 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலை பன் மால் பின்புறம் வின்ஸ்ஸ்டோன் ரெசிடென்சியில்
“கஃபே டி” என்ற புதிய தேநீர் விடுதி திறக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் முதல் அலுவலக ஊழியர்கள், கலைஞர்கள் வரை அனைவரையும் கஃபேக்கள் கவர்ந்திழுக்கின்றன. அதிலும் தொழில் மற்றும் கல்வி நகரமாக கோவையில் பல்வேறு விதமான புதிய கஃபேக்கள் திறக்கப்பட்டது வருகிறது.

இந்நிலையில், சென்னையில் பிரபலமான கஃபே என்ற தேநீர் விடுதி கோவை பீளமேடு பன்மால் பின்புறம் இன்று திறக்கப்பட்டது.

இதுகுறித்து கஃபே நிறுவனர் சுந்தர மூர்த்தி கூறுகையில்,

எங்கள் முதல் கிளை சென்னையில் துவக்கப்பட்டது. தற்போது கோவையில் இரண்டாவது கிளையை திறந்துள்ளோம். தனி செப் மூலம் ஸ்பெஷலாக புதிய மெனுக்களை தயாரித்துள்ளோம். இதுதான் எங்கள் கடையின் சிறப்பு. ஸ்பெஷல் பில்டர் காப்பி தான் எங்கள் சிறப்பு. அதைமட்டுமின்றி எல்லா விதமான மக்களும் வந்து செல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப குறைந்தது 20 ரூபாய் இருந்து 300 ரூபாய் வரை பீட்சா, பர்கர் வகைகள் போன்ற உணவுகள் இங்கு கிடைக்கும்.

கோவையிலேயே ஆர்.எஸ். புரம், சாய்பாபாகாலனி, சரவணம்பட்டி உள்ளிட்ட 5 இடங்களில் புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மேலும் படிக்க