• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ‘Navigating Autism Together’ விழிப்புணர்வு நிகழ்ச்சி – பிரபலங்கள் பங்கேற்பு

March 28, 2026 தண்டோரா குழு

கோவையில் ஆட்டிசம் குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “Navigating Autism Together” என்ற சிறப்பு நிகழ்ச்சி ஐ.எம்.ஏ. அரங்கில் நடைபெற்றது.

(Third Eye) தேர்ட் ஐ ஆட்டிசம் மையம் மற்றும் GO BLUE அமைப்புகள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, தேர்ட் ஐ ஆட்டிசம் மையத்தின் நிறுவனர் சரண்யா தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஜி. பக்தவத்சலம் மற்றும் டாக்டர் அனுஷா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ஆட்டிசத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதின் முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளுக்கு உள்ளடக்கிய கல்வி வழங்கப்பட வேண்டிய அவசியம் குறித்து பேசினர்.

மேலும்,சின்னத்திரை பிரபலங்களான அர்ச்சனா சந்தோக் மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் கலந்து கொண்டு,ஆட்டிசம் குறித்த சமூக புரிதல் மற்றும் கருணை மனப்பான்மையை வளர்க்க வேண்டியது குறித்து வலியுறுத்தினர்.அர்ச்சனா சந்தோக் தலைமையில் நடைபெற்ற நிபுணர் குழு கலந்துரையாடலில்,ஆட்டிசம் விழிப்புணர்வு, ஆரம்ப சிகிச்சை முறைகள் மற்றும் ஆதரவு அமைப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆட்டிசம் மைய மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதனுடன்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி அமர்வு நடத்தப்பட்டு, ஆட்டிசத்தின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காணும் முறைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற உள்ளடக்கிய சூழலை உருவாக்குவது குறித்து நடைமுறை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.மொத்தத்தில், ஆட்டிசம் குறித்த சமூக விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பாராட்டுகளை பெற்றது.

மேலும் படிக்க