• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

November 25, 2021 தண்டோரா குழு

கோவை அருகே பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.மாணவிக்கு கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணகுமார் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது காதலாக மாறியது. இதனிடையே மாணவியை சரவணகுமார் திருமண ஆசை காட்டி தனியாக அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார். எதையும் வெளியே சொல்லக்கூடாது என அவர் மாணவியை மிரட்டினார். மேலும் அடிக்கடி மாணவியை மிரட்டி அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார்.

இதனால் மாணவி கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி அங்குள்ள கழிப்பறைக்கு சென்று பிளேடால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.இதனை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மாணவியின் பெற்றோர் அவரிடம் எதற்காக தற்கொலை செய்ய முயன்றாய் என விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணகுமார் அடிக்கடி தன்னை அழைத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

இதனை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து மாணவி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க