• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ‘ஜூவல் ஒன்’ புதிய பிரம்மாண்ட ஃபிளாக்ஷிப் ஷோரூம் திறப்பு

May 29, 2026 தண்டோரா குழு

கோயம்புத்தூரில் ‘ஜூவல் ஒன்’ புதிய பிரம்மாண்ட ஃபிளாக்ஷிப் ஷோரூமை அந்நிறுவனத்தின் நிறுவனர் சீனிவாசன் திறந்து வைத்தார்.

தங்கம் மற்றும் வைர நகை வணிகத்தில் தரம், பாரம்பரியம் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் பெயர் பெற்ற Jewel One நிறுவனம், தனது புதிய பிரம்மாண்டமான ஃபிளாக்ஷிப் ஷோரூம் திறபு விழா கோயம்புத்தூர் கிராஸ் கட் ரோட்டில் நடைபெற்றதும்
42 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட Emerald Jewel Industry India Ltd. நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சீனிவாசன் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.

புதிய கட்டிடம், நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில், 5 தளங்களைக் கொண்ட இந்த ஷோரூமில் தனித்தனி பிரத்யேக பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.அதில் தங்க நகைகளுக்கான “Gold Gallery”, வைர நகைகளுக்கான “Diamond Atelier”, மணப்பெண் நகைகளுக்கான “Bridal Pavilion”, தனிப்பயன் நகை வடிவமைப்புகளுக்கான “The One Lounge”, வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான “Silver Studio” ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும் 7 லட்சத்துக்கும் அதிகமான நகை வடிவமைப்புகள், 20-க்கும் மேற்பட்ட மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள், 100 சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்த 916 ஹால்மார்க் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளுக்கான முழுமையான எக்ஸ்சேஞ்ச் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய அடையாளத்துடன் பிரம்மாண்ட அனுபவத்தை வழங்கும் இந்த திறப்பு விழாவில் கோவையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க