• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெந்தயக்கீரை சப்பாத்தி செய்ய வேண்டுமா…!

August 30, 2018 http://tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 11/2 கப்
வெந்தயக் கீரை – 1/2 கப்
தயிர் – 1/4 கப்
தண்ணீர் – சுமார் 1/2 கப்
மிளகாய்த் தூள் -1 டீஸ்பூன்
தனியாத் தூள் -1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
சீரகம், ஓமம் – 1டீஸ்பூன் (வறுத்து பொடித்தது)
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்

செய்முறை:

கீரை,பொடிவகைகள்,உப்பு இவற்றை பாத்திரத்தில் கலந்துகொள்ளவும்.அதனுடன் தயிர் சேர்த்து கலக்கவும்.கோதுமை மாவையும் சேர்க்கவும்.சிறிது சிறிதாக நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துகு பிசைந்துகொள்ளவும்.பின்னர் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் விட்டு மேலும் 5 நிமிடங்கள் பிசைந்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

சப்பாத்தி மாவை சிறிய உருண்டைகளாகப் பிரித்து,சப்பாத்திகளாகத் தேய்த்து சுட்டு எடுக்கவும். காரசாரமான இந்த வெந்தயக்கீரை சப்பாத்திக்கு ரைத்தா,ஊறுகாய்,வெண்ணெய்,தேன் இவை பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும்.

மேலும் படிக்க