• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முள்ளங்கி சப்பாத்தி

September 27, 2018 koodal.com

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – 2.

கோதுமை மாவு – 1 கப்.

சிவப்பு மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன்.

ஓமம் – 1 டீ ஸ்பூன்.

மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்.

தனியாத் தூள் – 1/2 டீ ஸ்பூன்.

எண்ணை – 8 டேபிள் ஸ்பூன்.

உப்பு – 1/2 டீ ஸ்பூன்.

செய்முறை:

முள்ளங்கியை நன்கு கழுவி பூத்துருவலாக துருவிக் கொள்ளவும்.வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கோதுமை மாவுடன் சேர்க்கவும்.

துருவிய முள்ளங்கி, உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து தேவையானால் சிறிது தண்­ணீர் சேர்த்து (முள்ளங்கித் துருவலிலேயே தண்­ணீர் இருக்குமாதலால் தேவையானால் மட்டுமே தண்ணீ­ர் சேர்க்கவும்) சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் தட்டி, ஒரு தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் போட்டு இரு பக்கமும் எண்ணை ஊற்றி திருப்பிவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:

சப்பாத்தியின் சுவை மற்றும் ஆரோக்கிய சுவையை அதிகரிக்க கேரட் துருவலையும், முள்ளங்கித் துருவலுடன் சேர்க்கலாம்.முள்ளங்கியையும் ஓமத்தையும் இணைத்து சப்பாத்தி செய்து உடலாருக்கு வழங்குவதானது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சமையல்தானே!

மேலும் படிக்க