• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காளான் சான்விட்ச் செய்ய வேண்டுமா…!

September 21, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

காளான் – 200 கிராம்
கோதுமை பிரட் – 4
வெங்காயம் – 2
பூண்டு – 4 பல்
இஞ்சி – சிறிதளவு
கரம் மசாலா தூள் – கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
வெண்ணைய் – 100 கிராம்

செய்முறை:

காளான்களைச் நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.காளான்,வெங்காயம்,மிளகாய்,கொத்துமல்லித் தழைகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம்,இஞ்சி,பூண்டை மிக்சியில் லேசாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் வெண்ணைய் போட்டு,லேசாக அரைத்து வைத்துள்ள வெங்காயம்,பூண்டு விழுதை வதக்கிக் கொண்டு,அதனுடன் காளான்,பச்சை மிளகாய்,மசாலாத் தூள் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

கிரேவியாக வந்ததும் கொத்துமல்லித் தழைகளை போட்டு இறக்கி விடவும்.இந்த கிரேவியை இரண்டு கோதுமை பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து பரிமாறவும்.சுவையான காளான் சான்விட்ச் தயார்.

மேலும் படிக்க