• Download mobile app
19 Jul 2026, SundayEdition - 3812
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவையான கறிவேப்பிலை மிளகு குழம்பு செய்ய…!

August 20, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
மிளகு – 20
உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
புளி – நெல்லிக்காய் அளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு,காய்ந்த மிளகாய்,உளுத்தம்பருப்பு,துவரம்பருப்பு,சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து புளி,உப்பு சேர்த்து,நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து,அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.சுவையான கறிவேப்பிலை மிளகு குழம்பு தயார்.

மேலும் படிக்க