• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரியன் க்ரிஸ்பி சிக்கன்

February 2, 2017 kayalsamayal.com

தேவையான பொருள்கள் :

– சிக்கன் விங்க்ஸ் – 5 – 6 துண்டுகள்
– சோள மாவு – 2 கப்
– சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
– தக்காளி சாஸ் – 2டீஸ்பூன்
– சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்
– மஸ்டட் – 1 டீஸ்பூன்
– காரன் சிரப்/ரைஸ் சிரப் – 2 டீஸ்பூன்
– பழுப்பு சக்கரை – 2 டீஸ்பூன்
– வினிகர் – 1 டீஸ்பூன்
– பூண்டு – 2 பல்
– எண்ணெய் – தேவையான அளவு
– மிளகு – சிறிதளவு
– உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, உப்பு, மிளகு, சேர்த்து விரவி வைக்க வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் சோள மாவை எடுத்து விரிவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக விரவ வேண்டும். சோள மாவு சிக்கன் துண்டுகளுடன் நன்றாக ஓட்டும்படி விரவி கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு பத்து நிமிடம் நன்றாக பொறித்து எடுக்க வேண்டும். தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, பொறித்த சிக்கன் துண்டுகளை மீண்டும் 5 நிமிடம் அதே எண்ணையில் பொறிக்க வேண்டும்.

சாஸ் தயார் செய்ய :

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அணைத்து சாச்களையும் சேர்க்கவும். நன்றாக கிளறி கெட்டியானதும் காரன் சிரப், பழுப்பு சக்கரை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சாஸ் தயார்.

இறுதியாக பொறித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சாஸ் உடன் சேர்த்து நன்றாக விரவி விட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.

மேலும் படிக்க