• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முட்டை சீஸ் ரோல்

May 22, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

முட்டை – 2
சீஸ் – 8 துண்டுகள்
பிரட் – 8 துண்டுகள்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 சிட்டிகை (துருவியது)
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு மிளகாய் தூள், சாட் மசாலா சேர்த்து, கலவை நன்கு கெட்டியாகும் வரை கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு சோள மாவை தண்ணீர் ஊற்றி ஓரளவு நீர்ம நிலையில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் ஒரு சீஸ் துண்டை வைத்து, பின் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவை சிறிதை சீஸ் மேல் வைத்து, நீர்ம நிலையில் கலந்து வைத்துள்ள சோள மாவு கொண்டு ரோல் போன்று சுருட்டிக் கொள்ள வேண்டும்.

இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும். இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சுருட்டி வைத்துள்ள ரோல்களை வைத்து, நன்கு பொன்னிறமாகும் வரை பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது சுவையான முட்டை சீஸ் ரோல் ரெடி!!!

மேலும் படிக்க