• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாக்லேட் சிப்ஸ் கேக்

May 15, 2017 tamilboldsky.com

தேவையான பொருட்கள்:

வெள்ளை சாக்லேட் – 170 கிராம் (தோராயமாக வெட்டப்பட்டது)
டார்க் சாக்லேட் சிப்ஸ் – 50 கிராம்
வெண்ணெய் – 25 கிராம்
ஆமணக்கு சர்க்கரை – 70 கிராம்
முட்டை – 2
வெண்ணிலா – 1 தேக்கரண்டி
சுத்திகரிக்கப்பட்ட மாவு – 40 கிராம்
உப்பு – ஒரு சிட்டிகை
கோக்கோ பவுடர் – தூவுவதற்காக

செயல்முறை:

ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் வெண்ணெய் மற்றும் ஆமணக்கு சர்க்கரை சேர்க்க வேண்டும். அதன் பிறகு ஒரு கை கலப்பான் கொண்டு, நீங்கள் நன்றாக இந்த இரண்டு பொருட்களையும் கலக்க வேண்டும்.

இந்த செய்முறைக்கு உருகிய வெள்ளை சாக்லேட் தேவைப்படும். எனவே, ஒரு மைக்ரோவேவ் ஓவனில் பொடித்த வெள்ளை சாக்லேட்டை வைத்து உருக்க வேண்டும்.இதற்கு இடையில், வெண்ணெய் மற்றும் சர்க்கரை கலவையில் ஒரு முட்டை சேர்க்க வேண்டும். மீண்டும் அந்தக் கலவையை நன்கு கலக்கி அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, மைக்ரோவேவ் ஒவனில் இருந்து உருகிய வெள்ளை சாக்லேட்டை எடுத்து அதை லேசாச அசைத்து கலக்க வேண்டும். பிறகு அதை தனியே வைத்து விடுங்கள்.மீண்டும் நீங்கள் தயாரித்த முட்டை கலவையை எடுத்து அதை மீண்டும் கை கலப்பான் பயன்படுத்தி நன்கு கலக்க வேண்டும்.

இப்போது, இந்தக் கலவையில் இரண்டாவது முட்டையைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலந்த பின் அந்தக் கலவையில் உருகிய சாக்லேட்டை ஊற்றவும்.மறுபடியும் அந்தக் கலவையை நன்கு கலக்கி சிறிது வெண்ணிலா சேர்க்கவும்.

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் டார்க் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து அதனுடன் சுத்திகரிக்கப்பட்ட மாவு சேர்க்க வேண்டும். தற்பொழுது இதை நாம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளை கலவையுடன் இதை கலக்க வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க மறக்க வேண்டாம்.

இப்போது, அது கட் மற்றும் போல்ட் முறை பயன்படுத்தி கலவையை நன்கு கலக்கவும்.உங்களுடைய கலவை இப்போது தயாராக உள்ளது. ஒரு தட்டை எடுத்து அதில் பேக்கிங் கப்பை வைக்கவும்.

ஒவ்வொரு கப்பிழும் வழுவழுப்பிற்காக வெண்ணெய் தடவவும்.தற்பொழுது கொக்கோ தூள் எடுத்து அதை அச்சு முழுவதும் பரவும் படி தூவவும். மீதி உள்ள கோக்கோ தூளை மீண்டும் கிண்ணத்தில் வைத்து விடவும். இப்பொழுது உங்களுடைய அச்சு தயார்.

இப்போது, கலவையை ஒவ்வொரு அச்சிலும் முக்கால் பாகம் இருக்குமாறு நிரப்பவும்.நீங்கள் சுமார் 200 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உங்கள் மைக்ரோவேவ் ஓவனை முன் வெப்பப்படுத்தவும். அதன் பின்னர் சரியாக 14 நிமிடங்களுக்கு உங்களின் கேக்கை பேக் செய்யவும்.

தற்பொழுது உங்களுடைய கேக் தயாராக இருக்கும். அதை அடுப்பில் இருந்து வெளியே எடுத்து, அதை சுமார் 2-3 நிமிடங்கள் குளிர விடவும்.

இப்போது, மெதுவாக உங்கள் கேக்கை அச்சிலிருந்து பிரித்து எடுக்கவும். தற்பொழுது உங்களுடைய கேக் தயார். அதை தட்டில் வைத்து உங்களின் அன்புக்குரியவர்களுக்கு பரிமாறவும்.

மேலும் படிக்க