• Download mobile app
25 Aug 2026, TuesdayEdition - 3849
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீட்ரூட் வடை

January 18, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – ஒரு கப் (ஒரு மணி நேரம் ஊறவைத்தது)

பீட்ரூட் – ஒரு கப் (துருவியது)

சோம்பு – ஒரு டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

பூண்டு – நான்கு பல்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் – இரண்டு

காய்ந்த மிளகாய் – இரண்டு

உப்பு – தேவைகேற்ப

பெருங்காயம் – சிறிதளவு

பொட்டு கடலை மாவு – தேவைகேற்ப

வெங்காயம் – மூன்று (பொடியாக நறுக்கியது)

கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன் (அரை மணி நேரம் ஊறவைத்தது)

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் ஊறவைத்த துவரம் பருப்பு, பீட்ரூட், சோம்பு, கரிவேபில்லை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், பொட்டு கடலை மாவு தேவைகேற்ப சேர்த்து அனைத்தையும் விழுதாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும். பிறகு, அதில், வெங்காயம், ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தண்ணியாக இருந்தால் சிறிதளவு பொட்டு கடலை மாவு சேர்த்து கொள்ளலாம். சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மேலும் படிக்க