• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மசாலா பால்

March 1, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

பால் – 2 கப்

சர்க்கரை – 1 டீஸ்பூன்

பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

கிராம்பு – 2

பட்டை – 1/2 இன்ச்

ஏலக்காய் – 1 (தட்டிக் கொள்ளவும்)

பாதாம் – 4

பிஸ்தா – 6

குங்குமப்பூ – சிறிது

செய்முறை:

முதலில் பாதாம் மற்றும் பிஸ்தாவை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, தோலுரித்து பொடியாக நறுக்கி அல்லது அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின் 1 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து அதில் உள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காயை எடுத்துவிட வேண்டும்.

பின்பு அதில் குங்குமப்பூ பால், மிளகுத் தூள், சர்க்கரை, பனங்கற்கண்டு, நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், சுவையான மசாலா பால் ரெடி!!!

மேலும் படிக்க