• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாம்பழ லட்டு

May 26, 2017

தேவையானப் பொருட்கள்

மாம்பழ கூழ் – 1/2 கப்.
சுண்டக் காய்ச்சிய பால் – 1/2 கப்.
தேங்காய் பவுடர் – 1 கப்.
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்.
நட்ஸ் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது).

செய்முறை:

இந்த ரெசிபியை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது சிறந்தது. அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கலக்க வேண்டும். நல்ல பதத்தில் அதாவது சிறிது கெட்டியாக லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

இறக்கி வைத்த இந்தக் கலவை ஆறிய பின் சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டில் சிறிது தேங்காய் பவுடரை தூவிக் கொள்ளுங்கள். அந்த பவுடர் மீது செய்து வைத்த உருண்டைகளை உருட்டி எடுத்தால் சுவையான மாம்பழ லட்டு ரெடி…

மேலும் படிக்க