• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலபார் சிக்கன் ரோஸ்ட்

April 17, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

சிக்கன் லெக் பீஸ் – 6

வெங்காயம் – 20 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)

இஞ்சி – 1 துண்டு (நீளமாக நறுக்கியது)

தேங்காய் எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சமையல் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

சிக்கன் ஊற வைப்பதற்கு

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சோள மாவு – 2 டீஸ்பூன்

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

எலுமிச்சை – 1

செய்முறை:

முதலில் சிக்கன் லெக் பீஸை நீரில் சுத்தமாக கழுவி, அதில் ஆங்காங்கே கத்தியால் கீறி விட வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் லெக் பீஸை வைத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்கவும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெடி!!!

மேலும் படிக்க