• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீர்க்கங்காய் சட்னி செய்ய…!

March 1, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் – 1 மேலோட்டமாக தோல் சீவி நறுக்கியது
சின்ன வெங்காயம் – 1 கப்
தக்காளி – 1 (நறுக்கியது)
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
புளி – 1 நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 2 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1மேசைக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து, நன்கு வதக்கவும்.அதை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும். பின் அதே வாணலியில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் ,பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும். கடைசியாக மல்லி இலை சேர்த்து இறக்கவும்.

பிறகு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு , சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரகர பதத்தில் அரைக்கவும். 6.தாளிக்க சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றவும்.

குறிப்பு: இளம் பீர்க்கங்காய் தான் சுவையாக இருக்கும். நறுக்கும் போது சிறு துண்டை சுவைத்து பார்ககவும். கசந்தால் பயன்படுத்த வேண்டாம்.

மேலும் படிக்க